Thursday, March 28, 2013
இலங்கை::இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்ற சூழ்நிலையில், இலங்கைக்கான புதிய வர்த்தக சலுகைகளை இந்திய மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால உறவை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், வரிச்சலுகையுடன் இலங்கையில் இருந்து இந்தியா தமது இறக்குமதிகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வரிசலுகையுடன் ஏற்றுமதி செய்யப்படுகின்ற புடவை தொகுதிகளை 5ல் இருந்து எட்டாக அதிகரித்துள்ளது.
அத்துடன் பாலுற்பத்தி பொருட்களுக்கான சுகாதார பரிசோதனை சான்றிதழின் காலாவதி காலத்தை, ஆறில் இருந்து 12ஆக அதிகரித்துள்ளது.

No comments:
Post a Comment