Thursday, March 28, 2013

இந்திய எல்லைக்குள் வந்த இலங்கை மீனவர் 5 பேர் விடுவிப்பு!

Thursday, March 28, 2013
தூத்துக்குடி::இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 17ஆம் தேதி ரோந்து பணியில் இருந்தபோது தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த வர்ணகுல சூர்யா (36), வெஸ்டியஸ் அனுரா(29), ஷனுத் இமானுவேல் வீரசேகரா(37), சுனில்(57), ஜூடு சாமன்(32) ஆகியோரை பிடித்தனர்.இவர்களை மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து தமிழக அரசு செயலாளர், அவர் களை விடுவிக்க உத்தரவிட்டார். இதன்பேரில் ராமநாதபுரம் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையிடம் நாளை ஒப்படைக்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment