Wednesday, March 20, 2013
இலங்கை::இலங்கையர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.தமிழகத்திற்கு செல்லும் இலங்கையர்கள் மீது அண்மைக்காலமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியா விஜயம் செய்யும் இலங்கையர்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்குமாறு மாநில அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் இலங்கையர்கள் மீது தாக்குதல் நடத்தியோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான சம்பவங்களின் மூலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment