Wednesday, March 20, 2013

சன் டிவி ஆசிரியர் கைது! பணியிடத்தில் பாலியல் தொந்தரவு!

Wednesday, March 20, 2013
சென்னை::பணியிடத்தில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சன் தொலைக்காட்சியின் செய்தி எடிட்டர் ராஜாவை போலீசார் விசாரணை செய்ததாகவும் பிறகு கைது செய்ததாகவும் பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் அந்த பெண் செய்தி வாசிப்பாளர் புகார் அளித்தையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமிஞ்சக்கரையில் உள்ள இந்த பெண் செய்தி வாசிப்பாளர் (28) தனது புகாரில் தெரிவிக்கையில், சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அவரது விருப்பத்திற்கு இணங்காததால் அதிகாலை ஷிப்டிற்கு தன்னை மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

"எனக்கு அந்த அதிகாலை ஷிப்டே அடிக்கடி கொடுக்கப்பட்டது. இதனை எதிர்த்தபோது விருப்பத்திற்கு இணங்கும் வரை இதே ஷிஃப்ட்தான் என்று வலியுற்தினார். மேலும் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் வேலை போய்விடும் என்று மிரட்டினார். என்று அந்த செய்தி வாசிப்பாளர் தனது மனுவில் கூறியுள்ளார்.

மேலும் இரவு நேரங்களில் எஸ்.எம்.எஸ்., போன்கால்கள் என்று பெரும் தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராஜாவின் கூட்டாளியான வெற்றிவேந்தன் என்ற மற்றொரு பத்திரிக்கையாளரை வைத்து இந்த செய்திவாசிப்பாளரை அணுகியுள்ளார் ராஜா, அதாவது இணங்கினால் நிறைய சம்பளம் மற்றும் பிற வசதிகள் செய்யப்படும் என்று ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது.

மேலும் சில பெண் செய்தியாளர்களிடம் வெற்றி வேந்தனும் பாலியல் தொடர்பு வைத்திருந்தது புகைப்படங்களுடன் லீக் ஆனதும் செய்தி ஆசிரியர் ராஜா அவரை வேறு ஊருக்கு பணி இடமாற்றமும் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்தப் புகாரை அனுப்பிய அந்தப் பெண் தன் புகார் மனுவுடன் வெற்றிவேந்தனின் குரல் பதிவுகள் மற்றும் அவரது பாலியல் உறவு தொடர்பான புகைப்படங்களையும் கமிஷனரிடம் சமர்ப்பித்ததாக தெரிகிறது.

No comments:

Post a Comment