Wednesday, March 20, 2013

யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது!

Wednesday, March 20, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கைக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க முற்படுவதை எதிர்த்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது

இந்த பேரணியில் யாழ். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதோடு அமெரிக்கா, இந்திய மேற்கு நாடுகளுக்கு எதிராக கோசங்களையும் எழுப்பியிருந்தனர்

2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியால், யாழில் முக்கிய போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் உருவப் பொம்மையும் எரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment