Wednesday, March 20, 2013
இலங்கை::இத்தாலிக்கான இலங்கைத்தூதுவர் அசித்த பெரேராவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணியாற்றி வந்த மூன்று இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தூதுவர் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தூதுவரை நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவர் அதற்கு தயாராகும் காலப்பகுதியில் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
பெருந்தொகையான பணத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலி தூதுவருக்கு எதிராக மோசடிகுற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அண்மையில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில் அவர் அங்கிருந்து மீளழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment