Tuesday, March 12, 2013

அமெரிக்காவுடன் பேச்சுநடத்த வேண்டும் என்ற இந்தியாவின் ஆலோசனையை இலங்கை நிராகரிப்ப?

Tuesday, March 12, 2013
இலங்கை::அமெரிக்காவுடன் பேச்சுநடத்த வேண்டும் என்ற இந்தியாவின் ஆலோசனையை இலங்கை நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா., மனித உரிமை தீர்மானம் தொடர்பாக இலங்கை, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனை வரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் தீர்மானம்கொண்டு வர வேண்டும் என இலங்கைக்கு கடந்த வாரம் இந்தியா ஆலோசனை வழங்கியிருந்தது.

இதனையே இலங்கை நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடபிரநிதி ரவிநாத் ஆரியசிங்ஹ, அமெரிக்கா தீர்மானத்தின் சாராம்சத்தை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் உத்தேசிக்கவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையும் இலங்கை அங்கீகரிக்கவில்லை என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment