Tuesday, March 12, 2013
இலங்கை::நாட்டுக்கு எதிராக பாரியளவிலான சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலித் தலைவர்கள் நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புடன் நாட்டுக்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டதாகவும், ஜே.வி.பி.யும் புலிகளும் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment