Tuesday, March 12, 2013

ஐ.நா., தீர்மானத்திற்கு மத்திய அரசை வலியுறுத்த புலிகளின் உலக தமிழ் அமைப்பு வேண்டுகோள்!

Tuesday, March 12, 2013
சென்னை::இலங்கை மீது, சர்வதேச விசாரணை நடத்த கொண்டு வரப்படும், ஐ.நா., தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவு அளிக்குமாறு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, புலிகளின் உலக தமிழ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் தலைவர் செல்வன் பச்சமுத்து, ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதம்: இலங்கையின் போர் குற்றங்களைக் கண்டித்து, அந்நாட்டின் மீது, பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை பங்கேற்கும், ஆசிய தடகள விளையாட்டை, சென்னையில் நடத்தக் கூடாது என, தெரிவித்துள்ளீர்கள். இதுபோன்ற உங்களின் நடவடிக்கை, சர்வேச அளவில், இலங்கைக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. (புலிகளின்) ஈழத் தமிழர்கள் சுய மரியாதையோடும், சம உரிமையோடும் வாழ வேண்டும் என, நினைக்கும் தலைவர்களில், நீங்களும் ஒருவர். இந்நிலையில், இலங்கையின் போர்க் குற்றங்களை, சுதந்திரமான சர்வதேச புலன் விசாரணை நடத்த வேண்டும் என, ஐ.நா.,வின் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இலங்கையின் போர்க் குற்றங்கள் மீது, தண்டனை அளிக்கவும், (புலிகளின்) ஈழத் தமிழர்களின் வாழ்வு மேம்படவும், இது, பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே, இத்தீர்மானத்தை, இந்தியா ஆதரித்து நிறைவேற்ற, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு செல்வன் பச்சமுத்து கூறியுள்ளார்.

No comments:

Post a Comment