Tuesday, March 12, 2013

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவிருக்கும் தீர்மானம் தொடர்பான விவகாரங்களை கையாள்வதற்காக: சமரசிங்க இன்று ஜெனிவா பயணம்!

Tuesday, March 12, 2013
இலங்கை::இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவிருக்கும் தீர்மானம் தொடர்பான விவகாரங்களை கையாள்வதற்காக பெருந்தோட்ட, கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவாவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை பயணமாகவுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய அமைச்சர் சமரசிங்க நாடு திரும்பியிருந்த நிலையில் இன்று ஜெனிவாவுக்கு பயணமாகின்றார்.

இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் அவர் மீண்டும் அவர் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெப்ரவரி 27 ஆம் திகதி ஐ.நாவில் ஆற்றிய உரையின் போது அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்திற்கு கடும் ஆட்சேபனையை அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment