Sunday, March 24, 2013
டெல்லி::ஐநா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இலங்கைக்கு வெறிறியே ஆகும். இந்த விஷயத்தில் இந்தியா தெளிவான முடிவை எடுக்கவில்லை என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா நிபந்தனையின்றி ஆதரித்து இருக்கவேண்டும். இல்லையேல் நிபந்தனையின்றி இந்த தீர்மானத்தை எதிர்த்து இருக்கவேண்டும். அப்படி செய்து இருந்தால், உலக நாடுகளால் அது பாராட்டப்பட்டிருக்கும். திருத்தம் செய்யப்பட்ட அமெரிக்காவின் இந்த தீர்மானம் சரியானதே, நியாயமானதே. அது நிபந்தனையின்றி ஆதரவளிக்கக் கூடியதே. இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்று எந்த ஒரு நாடும் கூறவில்லை. எனவே அமெரிக்கா கொண்டுவந்த இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு மறைமுக வெற்றியே கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் சுப்பிரமணியம் சாமி.

No comments:
Post a Comment