Thursday, March 21, 2013

ஐக்கிய நாடுகள் சபையின் மனித பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கை தோல்வியடைந்துள்ளது:பிரேரணைக்கு இந்தியா ஆதரவு!

Thursday, March 21, 2013

ஜெனிவா::ஐக்கிய நாடுகள் சபையின் மனித பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கை தோல்வியடைந்துள்ளது:பிரேரணைக்கு இந்தியா ஆதரவு!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கை தோல்வியடைந்துள்ளது.

அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் இடம்பெற்ற நிலையில் பிரேரணைக்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்ததுடன் 13 நாடுகள் எதிராக வாக்களித்தன. அத்துடன், 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.

அமெரிக்காவின் இந்த தீர்மானத்தில் இந்தியா சில திருத்தங்களை முன்வைத்த நிலையில், வாக்கெடுப்பின் போது இலங்கைக்கு எதிராகவும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு 24 நாடுகள் ஆதரவாகவும் 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. அத்துடன் அந்த வாக்களிப்பில் எட்டு நாடுகள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கைக்கு ஆதரவாக:

கொங்கோ, மரூடினியா, உகண்டா, இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பாகிஸ்தான், கட்டார், தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈக்குவோடோரா, வெனிசுவேலா, தாய்லாந்து

இலங்கைக்கு எதிராக:

பெனின், கோட்டி டிவோரி, லிபியா, சியரா லியோன், இந்தியா, கொரியா, ஆஜர்ன்டினா, பிரேசில், சிலி, கொஸ்டாரிகா, கௌத்தமாலா, பெரூ, அஸ்திரியா, ஜேர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், சுவிஸ்தலாந்து, ஐக்கிய அமெரிக்கா, செக் குடியரசு, எஸ்டோனியா, மொன்டிகோரே, போலாந்து, மொல்டோவோ குடியரசு, ரொமேனியா

பங்குபற்றவில்லை:

அங்கோலா, கென்னியா, கஷகஸ்தான், ஜப்பான், மலேசியா, பொட்ஸ்வானா, பேர்கின் பாஸோ, எத்தியோப்பியா.........


இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்செயல்கள் தொடர்பில் 'அனைத்து நாடுகளும் ஏற்கக்கூடிய சுதந்திரமான நம்பகமான விசாரணை அவசியம்' என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவினால் இன்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன்போது இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றது.

இந்தியா கொண்டுவந்துள்ள திருத்தத்தில் 'இலங்கைக்கு எதிராக சுயேச்சையான, சுதந்திரமான விசாரணை தேவை. இந்த விசாரணையில் சர்வதேச சமுதாயத்தையும் பங்கெடுக்க வகை செய்ய வேண்டும் என்பதாகும்.

அத்துடன், 'இலங்கையில் தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படல் வேண்டும், அனைத்து சமூகங்களும் ஏற்கக்கூடிய தீர்வு முன்வைக்கப்படல் வேண்டும், மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை சென்று உண்மை நிலைமையை கண்டறிய வேண்டும். அனைத்து மக்களும் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வு காண இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும' போன்ற கோரிக்கைகளையும் இந்தியா தனது திருத்தத்தில் உள்ளடக்கியுள்ளது. இந்த திருத்தங்களையும் தீர்மானத்துடன் சேர்த்துள்ளது அமெரிக்கா.

கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட முதல் தீர்மானத்தையும் இந்தியா, கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆதரித்தது. அப்போது தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் எதிர்த்தன.


அப்போதும், இலங்கை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடைபெற வேண்டும் என்று தீர்மானத்தில் இந்தியாவினால் திருத்தம் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment