Sunday, March 24, 2013

புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயாமாஸ்ட்டர் குற்றச்சாட்டு: தமிழகத்தில் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்களால், இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு!

Sunday, March 24, 2013
இலங்கை::தமிழகத்தில் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்களால், இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படுவதாக  புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்ட்டர் தெரிவித்துள்ளார்.

அங்கு தமிழர்களுக்கு ஆதரவு வழங்குவது என்ற போர்வையில், தமிழக கட்சிகளுக்கு இடையில் அரசியல் போட்டிநிலைமையே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு நிதி வழங்கல்களை செய்துள்ளது.

எனினும் தமிழத்தில் இருந்து இதுவரையில் எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தடுப்பு காவலில் உள்ள தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக வெளியான செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.

தாம் மூன்று மாதங்கள் தடுப்பில் இருந்த போதும், தமக்கு எதிராக எந்த துன்புறுத்தலும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த நிலையில் உள்ள தமிழர்களும் இலங்கை தமிழர்களின் பெயரை சொல்ல நிதி சேகரிப்பை மேற்கொண்டுள்ளதாக தயா மாஸ்ட்டர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment