Sunday, March 24, 2013

சென்னையில் உள்ள இலங்கையின் உதவி உயர்ஸ்தானிகரத்தை இடமாற்றம் செய்ய நடவடிக்கை??

Sunday, March 24, 2013
இலங்கை::சென்னையில் உள்ள இலங்கையின் உதவி உயர்ஸ்தானிகரத்தை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன்படி சென்னையில் உள்ள இலங்கை உதவி உயர்ஸ்தானிகரத்தை திருவாநந்தபுரத்துக்கு மாற்றுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு வெளியுறவுகள் செயலாளர் கருணாதிலக அமுனுகமவை தொடர்பு கொண்டு வினவியது.

இந்த செய்தியை நிராகரித்த அவர், அவ்வாறு எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், அடுத்தக் கட்ட செயற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மூடப்பட்ட தமிழக கல்லூரிகள் நாளைய தினம் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment