Wednesday, March 20, 2013
சென்னை::மத்திய அரசிலிருந்தும், ஐ.மு., கூட்டணியிலிருந்தும் தி.மு.க., விலகியது எங்களுக்கு ஒரு எதிர்பாராத முடிவு,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறினார்.
சத்தியமூர்த்திபவனில் அவரது பேட்டி: இலங்கை பிரச்னையில், காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் அக்கறை செலுத்தி வருகிறது. இலங்கை வாழ் தமிழர்களுடைய உரிமைகள், மறுகுடியமர்த்தல், பயமற்ற வாழ்க்கை முறை இவைகளுக்கு மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி, தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஐ.நா., சபையில் அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை, கடந்த முறை இந்தியா ஆதரித்தது. இந்த முறையும் ஆதரிக்கும் . இதற்கிடையில் மத்திய அரசிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் விலகுவதாக கருணாநிதி கூறியுள்ளார். இது எங்களுக்கு ஒரு எதிர்பாராத முடிவாக உள்ளது.
இலங்கை விவகாரத்தில், மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். பொதுமக்களையும், தனிமனிதர்களையும், கட்சி அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்துவது தமிழ் பண்பாட்டிற்கும், நாகரிகத்திற்கும் மாறுபட்ட செயல். இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.
.jpg)
No comments:
Post a Comment