Wednesday, March 20, 2013
இலங்கை::தல யாத்திரை சென்ற இலங்கை பெளத்த மதகுருமார் சென்னை, தஞ்சாவூரில் தாக்கப்பட்டமை கண் டிக்கத்தக்க விடயமெனக் குறிப்பிட்டு ள்ள சர்வதேச இந்து மதபீடம் இவ் வாறான சம்பவங்கள் இலங்கை, இந் தியாவுக்கிடையில் நீண்ட காலமாக வேரோடியுள்ள கலாசார மொழி ரீதியான உறவுகளை பாதிக்கக் கூடிய விடயமெனவும் தெரிவித்துள்ளது. இந்து, பெளத்தமத உறவுகள் தமிழ்மொழி உறவுகளும் கலாசாரங்களும் இலங்கை இந்தியாவுக்கு மிடையில் பின்னிப் பிணைந்துள்ளன.
இலங்கையில் வளர்ந்துவரும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு இவ்வாறான நடவடிக்கைககள் உதவப்போவதில்லை. இந்தியாவில் இருந்து வருகை தரும் இந்து மத துறவிகள் இலங்கையில் வைத்து கெளரவிக்கப்பட்டு அனுப்பப்படு கின்றார்கள். திருத்தல யாத்திரிகள் மீது அடிதடிகளை மேற்கொள்பவர் இதை சிந்திக்க வேண்டும்.
மீண்டும் இவ்வாறான செயல்கள் தொடர்வதன் மூலம் தமிழக மக்களின் மதிப்பு குறையும். இந்த வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் மன்மோகன்சிங், இந்திய மத்திய அரசின் அறநிலை அமைச்சர், தமிழக அறநிலை அமைச்சர் இது பற்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், இலங்கையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சர்வதேச இந்து மதபீடத்தின் செயலாளரும், ஜனாதிபதியின் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளருமான பிரம்மஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment