Thursday, March 21, 2013
இலங்கை::ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பிரேரணை இப்போது இந்தியாவில் ஒரு பெரும் அரசியல் நெருக்கடியை தோற்றுவித்திருப் பதுடன், அசோக சக்கரவர்த்திக் காலம் முதல் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருந்து வந்த மத ரீதியான மற்றும் கலாசார ரீதியிலான நல்லுறவுக்கு தீங்கிழைக்கக் கூடிய வகையில் வேதனைக்குரிய நிகழ்வுகள் தமிழ்நாட்டில் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.
இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் நம்நாட்டைச் சேர்ந்த அப்பாவி பெளத்த பிக்குமாரையும் தமிழ் நாட்டில் தாக்கி துன்புறுத்துவதும் இப்போது ஒரு புதிய பயங்கரவாத அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி தன்னுடைய சுயநலப் போக்கினால் சர்வாதிகாரியைப் போன்று நடந்துகொள்வதை சுயமாக சிந்திக்கும் எந்தவொரு மனிதனும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதாவை பதவி கவிழ்த்து தான் மீண்டும் ஒரு தடவை அப்பதவியை பறித்து விட வேண்டும் என்ற சுயநல நோக்கில் இலங்கை மக்களின் பிரச்சினையை கலைஞர் ஒரு பகடைக்காயாக வைத்து அரங்கேற்றும் கோமாளித்தனமான அரசியல் நாடகம் இன்று கலைஞருக்கு மட்டுமல்ல முழுத் தமிழ் நாட்டுக்கே நீங்காத அவப்பெயரைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
ஜெயலலிதா அம்மையாரும் இலங்கைத் தமிழர்கள் மீது அன்பு வைத்துள்ள ஒரு அப்பாவிப் பெண்ணுமல்ல. அவரும் தான் நடத்தும் அரசியல் கபட நாடகத்தில் கலைஞரின் செல்வாக்கையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் வீழ்த்திவிட வேண்டும் என்ற ஆவேசத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மேலும் மோசம டையச் செய்யக்கூடிய வகையில் நடந்துகொள்கிறார்.
தமிழ் நாட்டில் தற்போது அரங்கேற்றப்படும் எமது நாட்டு பெளத்த பிக்குமாருக்கு எதிரான வன்முறைகள் தமிழ் நாட்டுடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் நம் நாட்டு தமிழர்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் சிங்களவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனிப்பட்ட மற்றும் வர்த்தக ரீதியிலான பயணங்களை தமிழ் நாட்டுக்கு மேற்கொள்ள விரும்புவோருக்கும் இது பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.
எங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டிருக்கும் எமது பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தமிழ் நாட்டில் இடம் பெறும் வன்முறைகளை நன்கு அவதானித்த பின்னர் மறு அறிவித்தல் வரை இலங்கைப் பிரஜைகள் தமிழ் நாட்டுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேவேளையில் பெளத்த புனித ஸ்தலங்களை பார்ப்பதற்கு இங்கிருந்து செல்லவிரும்பும் யாத்திரிகர்கள் தமிழ் நாட்டுக்குச் செல்லாமல் இந்தியாவின் வேறு ஒரு மாநிலம் ஊடாக புத்தகாயா, லும்பினி போன்ற பெளத்த புனித ஸ்தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார். தமிழ் நாட்டில் ஜெயலலிதாவுக்கும் கலைஞருக்கும் இடையில் நடைபெறும் அதிகாரப் போராட்டத்தில், இவ்விருவரும் தோல்விய டைந்து இன்று யதார்த்தமாக சிந்திக்கும் மக்களின் கேலி கிண்டலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவின் மத்திய அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுகிறோம், இந்திய காங்கிரஸ் கட்சியுடனான உறவை துண்டித்துவிடுவோம், மத்திய அரசாங்கத்தில் பதவி வகிக்கும் எமது கட்சியின் அமைச்சர்களும் இராஜினாமா செய்து விடுவார்கள் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அறிவித்திருந்தார். இதில் இருந்து கருணாநிதி தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றி தனது கட்சியின் செல்வாக்கை பெருக்குவதற்காக அப்பாவி மாணவர்களையும் ஏனையோரையும் வீதியிலிறக்கி இலங்கைக்கு எதிரான போராட்டங்களை தமிழ் நாட்டில் அரங்கேற்றி இருப்பது அம்பலமாகியுள்ளது.
இலங்கை மக்கள் தன்மானமும் சுயகெளரவமும் உள்ளவர்கள் என்பதை தமிழ் நாட்டின் சுயநலவாத அரசியல் வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். நம் நாட்டு மக்களும் தமிழ் நாட்டில் உள்ள அரசியல் வாதிகளால் ஏவப்படும் குண்டர்களைப் போன்று தான்தோன்றித் தனமாக இங்குள்ள இந்திய உல்லாசப் பயணிகளைத் தாக்கினால் விபரீதமான விளைவுகள் இருநாடுகளுக்கும் இடையில் உருவாகும் என்பதை கருணாநிதியும், ஜெயலலிதாவும் புரிந்துகொள்ள வேண்டும்.
இனிமேலாவது இவ்விரு தமிழ்நாட்டு அரசியல் வாதிகளும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது நல்லது. கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு முன்னால் புறக்கோட்டை, செட்டித்தெரு மற்றும் பிரதான வீதியைச் சேர்ந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும், பணியாளர்களும் நூற்றுக்கணக்கில் இந்திய தூதரகத்திற்கு முன்னால் நேற்று தமிழ் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தமது வேதனையை இந்திய உயர் ஸ்தானிகர் ஆலய அதிகாரியிடம் மகஜர் ஒன்றை கையளித்தார்கள்.
இராவண சக்தி என்ற அமைப்பும் தமிழ் நாட்டு வன்முறைகளுக்கு எதிராக நேற்று பதாகைகளை தாங்கியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட் டங்களை நடத்தியது. அவர்களிடம் உரையாடிய இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் தமிழ் நாட்டின் பெளத்த பிக்குமாரைத் தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உறுதியளித்தார். தமிழகத்திற்கு செல்லும் இந்திய யாத்திரிகர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதியும் தங்களுக்கிடையிலான அரசியல் பலப்பரீட்சைகளை நடத்துவதைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. ஆயினும் இலங்கைத் தமிழரை சம்பந்தப்படுத்தி போராட்டங்களை நடத்தி துன்பத்திலிருந்து மீண்டுள்ள அந்த அப்பாவி மக்களுக்கு இனிமேலும் துன்பம் இழைக்காமல் இருப்பது நல்லது.

No comments:
Post a Comment