Thursday, March 21, 2013

இராணுவச் சிப்பாய்களாக இணைத்து கொள்ளப்பட்ட வட பகுதிப் பெண்கள் இன்றுமுதல் நேரடி இராணுவ சேவையில்!

Thursday, March 21, 2013
இலங்கை::இலங்கையின் இராணுவ வரலாற்றில் முதல் முறையாக பெண் இராணுவச் சிப்பாய்களாக இணைத்து கொள்ளப்பட்ட வட பகுதியை சேர்ந்த 95 பெண்கள் இன்று  முதல் கிளிநொச்சியில் நேரடியான இராணுவ சேவையில் இணைக்கின்றனர்.

இராணுவத்தில் இணைத்து கொள்ளப்பட்ட இந்த தமிழ் பெண்கள் 5 மாத இராணுவப் பயிற்சிகளின் பின்னர், நேரடியான இராணுவச் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தில் நடைபெறும் மேற்படி பெண்கள் இராணுவத்தில் பயிற்சிகளை முடித்து கொண்டு வெளியேறும் வைபவத்தில், பிரதம விருந்தினராக பிரிகேடியர் ஆர் ரத்னசிங்கம் சபாபதி கலந்து கொள்ள உள்ளார்.

பயிற்சிகளை முடித்து கொண்டு வெளியேறும் தமிழ் பெண் இராணுவச் சிப்பாய்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இவர்கள் இராணுவத்தில் உள்ள பல்வேறு துறைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment