Thursday, March 21, 2013
இலங்கை::கருணாநிதியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டிய வகையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை ஆட்டுவிக்க முடியாது எனவும் இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர் எனவும் வெற்றிக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தை இல்லாமல் செய்ய எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
மாத்தளை அம்பன்கஹா பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்;டுள்ளார். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை பிளவுப்படுத்தி, அவர்கள் இடையில் பகையுணர்வை தொடர்ந்து வைத்திருக்கும் தேவை சிலருக்கு உள்ளது. இந்த பகையுணர்வின் உச்ச பிரதிபலன்தான் வடக்கில் ஏற்பட்ட போர். மீண்டும் இந்த குற்றத்தை செய்ய வேண்டாம் என சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்து வருபவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
ஜெயலலிதா, கருணாநிதியும் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு இலங்கையில் தீயை வைக்க பார்க்கின்றார். உலக முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு தமிழ் நாடு ஒன்றை உருவாக்க வேண்டுமாயின் அதற்கு பொருத்தமான இடம், தமிழ் மொழி குடும்பத்தை சார்ந்த மொழி அனைத்து பேசப்படும் தமிழகம், கேரளா,கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியா என்பதை கலைஞர் கருணாநிதியும் ஜெயலலிதாவுக்கு மிகவும் அன்புடன் கூறிக்கொள்கிறோம். அதுதான் பண்டைய சோழ ராஜ்ஜியத்தின் வரைப்படத்திற்கு சொந்தமான நிலப்பகுதி. தனிநாட்டை அமைக்க அதுவே சிறந்த இடம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment