Thursday, March 21, 2013
கோவை::புலிகளின் ஆதரவினர்களால் ராஜீவ் காந்தி சிலை உடைப்பு சம்பவம்: பட்டணம் புதூர்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.......
கோவையை அடுத்துள்ள சூலூரில் ராஜீவ் காந்தி சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டது. கோவையை அடுத்த சூலூர் பட்டணம்புதூரில் பிரதமர் ராஜீவ் காந்தியின் முழு உருவ சிலை உள்ளது. இங்கு நள்ளிரவில் யாரோ மர்மநபர்கள் சிலையின் முகத்தை சேதப்படுத்தி விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ராஜீவ் காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது பற்றி உடனடியாக காங்கிரஸ் பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தனர். கோவை புறநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி மனோகரன், துணைத்தலைவர் நல்லசாமி, சிவாஜி கந்தசாமி, சூலூர் வட்டார தலைவர் வெங்கிடுபதி, புறநகர் மாவட்ட செயலாளர் பேச்சி முத்து, பொது செயலாளர் நடராஜன், துணைத்தலைவர் ஜோதிமணி, நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர், இருகூர் நகர காங்கிரஸ் தலைவர் சிவசாமி, பட்டணம் புதூர் காங்கிரஸ் தலைவர் பால்ராஜ், மணி மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் சிலையை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்யவேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதனைத்தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், சூலூர் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீஸார் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராஜீவ் சிலை முன்பு திரண்டிருந்த காங்கிரஸ் தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பட்டணம்புதூர் ஊராட்சி தலைவர் சாரதாமணி ஜெயராஜ் அங்கு சென்று பார்வையிட்டார்.
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திமுக வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு அறிந்து திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதே நேரத்தில் காங்கிரஸாரும் இனிப்பு வழங்கினர். கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ராஜீவ்காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதா அல்லது இலங்கை தமிழர் விவகாரம் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஆர்.சின்னையன் தலைமையில் கோவை அவினாசி சாலை லட்சுமி மில்ஸ் சிக்னலில் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராஜீவ் காந்திசிலையை உடைத்தவர்களை போலீஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதில் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் என்ஜினியர் ராதாகிருஷ்ணன், வீனஸ் மணி, கே.பி.எஸ்.மணி, கோவை செல்வன், போஸ், பீளமேடு தங்கவேல், கணபதி ஆனந்த குமார், குல்பி தங்கராஜ், கோவிந்தசாமி, கனகராஜ், சாய்சாதிக், ராம்நகர் சீனிவாசன், பாலாஜி, பீளமேடு வரதராஜ், வக்கீல் கருப்புசாமி, பாஸ்கர், நாராயணன், இருகூர் சுப்பிரமணியம் கணபதி கணகராஜ், சூர்யா சுரேஷ் உட்பட 300 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment