Tuesday, March 19, 2013

இலங்கைக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ளாததால் மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொள்வதாக அறிவித்திருப்பது நாடகம் - சுப்பிரமணிய சாமி!

Tuesday, March 19, 2013
சென்னை::இலங்கைக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ளாததால் மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொள்வதாக அறிவித்திருப்பதை நாடகம் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தில் இந்தியா வலுவான திருத்தங்களை மேற்கொள்ள திமுக வலியுறுத்தியது.

ஆனால் திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த திமுக, ஏற்கெனவே அறிவித்தபடி மத்திய அரசில் இருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சாமி, திமுகவின் முடிவு ஆச்சரியப்படக் கூடியது அல்ல.. இது நல்ல நாடகம். அவர்கள் ஜெயலலிதாவைக் கண்டு பயப்படுகின்றவர்கள்.

அடுத்த ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ மீண்டும் மத்திய அரசில் திமுக இடம்பெறக் கூடும்.

மதவாதக் கட்சி ஆட்சிக்கு வரக் கூடாது என்று கூறிக் கொண்டு மீண்டும் காங்கிரஸ் அரசில் திமுக சேரும்.

இதுதான் நடைபெறப் போகிறது என்றார். சுப்பிரமணிய சாமி.

No comments:

Post a Comment