Tuesday, March 19, 2013
இலங்கை::தமிழ்நாட்டில் பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து எம்பிலிபிட்டி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக பெண் பௌத்த பிக்கு ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
எம்பிலிபிட்டி பகுதியில் தற்போது மழை பெய்வதாகவும் அதனையும் பொருட்படுத்தாது பெண் பிக்கு உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று காலை தொடக்கம் இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம்!
பௌத்த தேரர் உட்பட இலங்கையர்கள் மீது தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை சிங்கள ராவய அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன
.jpg)
No comments:
Post a Comment