Wednesday, March 20, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை - இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது!

Wednesday, March 20, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தீர்மானம் நாளைய தினம் ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா மூன்று தடவைகள் திருத்தம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. முதன் முதலில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் கடுமையானது எனவும், தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தங்களின் மூலம், தீர்மானத்தின் கடுமைத்தன்மை குறைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறெனினும், தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மாறாக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென இலங்கை நாளைய தினம் கோரிக்கை விடு;க்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மூலம் நாட்டுக்கு நன்மைகள் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தீர்மானத்தின் மூலம் பாதக விளைவுகளே ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்திருந்மை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment