Wednesday, March 20, 2013
அமெரிக்காவின் பிரேரணையில் இந்தியா சீர்த்திருத்தங்களை கோர வேண்டும் என்று, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அதன் தென்னாசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் பிரேரணை தற்போது வலுவற்றதாக உள்ளது.
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான திருத்தை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்த விடயத்தில் இந்தியா பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியாவினாலேயே தற்போது இந்த பிரேரணை பலவீனமாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment