Wednesday, March 20, 2013
இலங்கை::இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது அமெரிக்கா தமது பிரேரணையை தாக்கல் செய்யாது என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும், அது புலிகளுக்கு ஆதரவாகவோ அல்லது அவர்களின் மீள் உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவாகவோ அமையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கைக்கு எதிராக செயற்படுகிறது என்று கூற முடியாது. ஏற்கனவே புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு இந்தியாவே முழு உதவிகளையும் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியா இந்த பிரேரணை தொடர்பான நிலைப்பாட்டை தமக்கு ஏற்படுகின்ற அழுத்தங்களின் அடிப்படையிலேயே எடுக்கும் என்றும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment