Friday, March 22, 2013
இலங்கை::இலங்கையின் தற்போதை நிலவரங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை கனேடிய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவிருப்பதாக, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொதுநலவாய நாடுகளுக்கான கனேடிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
கனேடிய தூதுவர் ஹியுஜ் சாவேஜ் வடக்கிலங்கைக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், தாம் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பிலான அறிக்கை ஒன்றை தயாரித்து, கனேடிய அரசாங்கத்திடம் கையளிக்கவிருப்பதாக தெரிவித்தார்.
இதன்அடிப்படையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்வது தொடர்பில் கனடா தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments:
Post a Comment