Friday, March 22, 2013
சென்னை::இலங்கையுடனான சீனாவின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பில், இந்தியா மீண்டும் கவலை வெளியிட்டுள்ளது.
த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சீனாவுடன் இணைந்து இலங்கை தமது முதலாவது தொடர்பாடல் செய்மதியை எதிர்வரும் 2015ம் ஆண்டில் விண்ணில் செலுத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் இலங்கையின் சுப்ரீம் செட் மற்றும் சீனாவின் கிரேட வோல் ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான உடன்படிக்கை ஒன்றும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையுடன் சீனா மேற்கொள்கின்ற செயற்பாடுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை என்று இந்தியா கருதுகிறது.
இந்த நிலையில் இந்த விடயம் குறித்து அடுத்தவாரம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தை நடத்தி, ஆராயவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது....
இலங்கை சீனாவுடன் இணைந்து ஆரம்பிக்கவுள்ள விண்வெளித் திட்டம் தொடர்பில் இந்தியா உண்ணிப்பாக கவனம் செலுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டில் இந்திய நிறுவனத்துடன் தொடர்பாடல் செய்மதியொன்றை விண்ணுக்கு ஏவுவதற்கு இலங்கையின் நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளமை குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
சீனாவுடன் இணைந்து இலங்கை விண்வெளி பிராந்தியத்தை பயன்படுத்துகின்றமை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பேரவை அறிவித்துள்ளது.
இந்த விடயத்தை கருத்திற்கொண்டு இலங்கைக்காக செய்மதிகளை நிர்மாணிக்கவும் விண்ணுக்கு ஏவவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment