Saturday, March 23, 2013

சென்னையில் பௌத்த பிக்குகள் மீது தாக்குதல், மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள், நடிகர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவை அவசியமற்றது: ஹிந்து!

Saturday, March 23, 2013
சென்னை::சென்னையில் பௌத்த பிக்குகள் மீது தாக்குதல், மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள், நடிகர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவை அவசியமற்றது என த ஹிந்து செய்தி தாள் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டிகளில் இலங்கை வீரர்களை இணைத்து கொள்வது குறித்தும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக ஆளும் கட்சி உட்பட பல கட்சிகளும் இலங்கைக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையேயான வர்த்தக உறவு, குறிப்பாக கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைச்சாத்தான சுதந்திர ஒப்பந்தம் குறித்து இவர்கள் சிந்திக்கவில்லை என த ஹிந்து செய்திதாள் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களுக்கு அமைய 2011 ஆம் ஆண்டில் 48 ஆயிரத்து 500 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் ஊடாக இரண்டு நாடுகளும் பொருளாதார ரீதியாக தொடர்ந்தும் முன்னேறி வருகின்றன

இந்த சந்தர்ப்பத்தில் சில தரப்பினர் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே இரண்டு நாடுகளின் பொருளாதாரத்தினை கவனத்திற் கொண்டு இப்படியான அநாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறான விடயம் என்று ஹிந்து குறிப்பிட்டுள்ளது

No comments:

Post a Comment