Saturday, March 23, 2013

ஜெனீவா மனித உரிமை பேரவையின், அமர்வுகள் அனைத்தும் நேற்று நிறைவடைகின்றன!

Saturday, March 23, 2013
ஜெனீவா::ஜெனீவா மனித உரிமை பேரவையின், அமர்வுகள் அனைத்தும் நேற்று நிறைவடைகின்றன.

இந்தநிலையில், ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவுக்கான அமெரிக்க தூதுவர் எலின் ஜேம்பலேன் டொனஹோ

கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜெனீவா மனித உரிமை ஆணையாளர் பேரவையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் உரையாற்றியுள்ளார்.

பேரவையின் வரலாற்றில் இந்த முறை மனித உரிமைகள் தொடர்பான விடயங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை, காத்திரமாக செயற்பட்டுள்ளது

இதன்மூலம் ஜனநாயக முறையிலான சர்வதேச சமூகம் ஒன்று மேம்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

இந்த வருட அமர்வுகளில், இலங்கை மற்றும் சிரியா குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான விடயங்களின் மூலம் மனித உரிமைகள் மேம்படுதல் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து உறுப்பு நாடுகள் சிறந்த முறையில் செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் இடம்பெறும் தொடர்ச்சியான வன்செயல்கள் தொடர்பாக தமது கவலையினை வெளியிட்ட,அமெரிக்க தூதுவர் அங்கு இடம் பெற்று வரும் உயிரிழப்புக்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment