Saturday, March 23, 2013

அமெரிக்க பிரேரணைக்கு எதிரான நிலைப்பாட்டில் 22 நாடுகள் - மஹிந்த சமரசிங்க!

Saturday, March 23, 2013
இலங்கை::இலங்கை தொடர்பான வாக்கெடுப்பின்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் விரிசல் ஏற்பட்டதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரிதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணைக்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்தமை, எட்டு நாடுகள் வாக்களிக்காமை மற்றும் ஒரு நாடு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமை என்பன இந்த விடயத்தை உறுதிப்படுத்துவதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 22 நாடுகள் அமெரிக்க பிரேரணைக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டிருந்ததாகவும் அதில் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை 22 நாடுகள் புரிந்துகொண்டுள்ளதாக இலங்கையின் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை அநீதியான அநாவசியமான ஒன்று என்பதையே வாக்கெடுப்பின் முடிவு உறுதிப்படுத்துவதாக அமைச்சரை மேற்கோள்காட்டி ஜெனீவாவிலுவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை நேற்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment