Wednesday, March 20, 2013

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து, தி.மு.க., விலகிக் கொண்டது' என, கருணாநிதி அறிவித்த பின், அறிவாலயத்தில், தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்!

Wednesday, March 20, 2013
சென்னை::காங்கிரஸ் கூட்டணியிலிருந்து, தி.மு.க., விலகிக் கொண்டது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்த பின், அறிவாலயத்தில், தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மத்திய அமைச்சரவை மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து, தி.மு.க., நேற்று விலகியது. இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க.,வினர் திரண்டனர். "காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் ஒழிக' என்ற கோஷத்தை தி.மு.க.,வினர் எழுப்பினர். பத்தாயிரம் வாலா பட்டாசுகளை கொளுத்தினர். இனிப்புகளையும் வழங்கி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். மதியம், 1:00 மணிக்கு, கருணாநிதி தன் வீட்டிற்கு புறப்பட்ட போது, அவரது காரை சுற்றி தொண்டர்கள் சூழ்ந்து நின்று, "கருணாநிதியின் முடிவை வரவேற்கிறோம்' என, கோஷமிட்டனர்.

No comments:

Post a Comment