Wednesday, March 20, 2013
இலங்கை::கட்டுநாயக்கவிலிருந்து தமிழகத்திற்கான வானூர்தி சேவைகள் 50 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, வாராந்தம் 28 தடவைகள் இடம்பெறும் வானூர்தி சேவைகள் நாளை மறுதினம் தொடக்கம் 14 ஆக குறைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நிலவும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு மறுஅறிவித்தல் வரை இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று ஸ்ரீலங்கன் வானூர்தி சேவையின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகள் காரணமாவே இவ்வாறான நிலைமைக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி.பி என்பன தெரிவித்துள்ளன.
இதேவேளை, தமிழகத்தில் பௌத்த பிக்குகள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்பிட்டி பேருந்து தரிப்பிடத்தில் பௌத்த பிக்குனியொருவர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
பௌத்த பிக்குமார் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் நிறைவுறுத்தப்படும் வரை இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பௌத்த பிக்குகள் மீதான தாக்குதல்களை கண்டித்து மல்வத்தை மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் ஆகியோர் கையெழுத்திட்டு கண்டன மகஜர் ஒன்றை கண்டியில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் இந்திய அரசுக்கு குறித்த மகஜரை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்து இரண்டு பிக்குகள் ஊடாக நேற்று மாலை அனுப்பி வைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment