Wednesday, March 27, 2013

சர்வதேச சக்திகளுக்கு முகங்கொடுக்க வெளிநாட்டு இலங்கையர்களின் உதவி தேவை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, March 27, 2013
இலங்கை::இலங்கைக்கு எதிரான சர்வதேச சக்திகளுக்கு முகங்கொடுக்க வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்கள் சிலரை அலரி மாளிகையில் நேற்று சந்தித்து பேசியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

இலங்கையில் 30 வருடகாலம் நிலவிய பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டில் அமைதியை நிலைநாட்டிய ஜனாதிபதிக்கு இச்சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்:

நாட்டின் எதிர்கால பயணத்திற்கு உலகம் முழுக்க உள்ள இலங்கையர்களின் முயற்சி அவசியம்.

தீவிரவாதம் அழிக்கப்பட்டதன் பின் நாடு வேகமான அபிவிருத்தி பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.

அத்துடன்- முதலீடு மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள; தமது பங்களிப்பை வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்,

வடக்கிலும் தெற்கிலும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் பல்வேறு சக்திகள் சர்வதேச மட்டத்திலும் சிக்கல்களை ஏற்படுத்த முயல்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவம் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பொய் பிரச்சாரங்களை நம்பாது நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பது மிக முக்கியமானது என ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

இதேவேளை, வடக்கு இன்று தன்னிறைவு அடைந்துள்ளதாகவும், வேறு எங்கிருந்தும் பொருட்களை அங்கு கொண்டுசெல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர்

No comments:

Post a Comment