Saturday, March 23, 2013
இலங்கை::இந்தியா தொடர்பான இலங்கையின் வெளிநாட்டு கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்த நிலையில், இலங்கை தமது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் தமிழகத்துடனான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment