Saturday, March 23, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை நிராகரித்த போதிலும், இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்கும் எண்ணமில்லை -இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன்!

Saturday, March 23, 2013
இலங்கை::இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்கும் திட்டமில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை நிராகரித்த போதிலும், இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்கும் எண்ணமில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவுமே இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் மனித நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதனை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிவில் சமூகம், சிறுபான்மையினர் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயகம், கருத்து சுதந்திரம், சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமை மேம்பாடு, பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தூதுவர் சிசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment