Saturday, March 23, 2013

கொலை முயற்சி வழக்கில் கைது : திவாகரன் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு!

Saturday, March 23, 2013
நீடாமங்கலம்::மன்னார்குடி அருகே கொலை முயற்சி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 3 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த ரிஷியூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழார்வன். முன்னாள் ஊராட்சி தலைவர். இவரை அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணமேனன், ராஜேந்திரன் ஆகியோர் நேற்று அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர். அவர்களிடம் இருந்து தமிழார்வன் தப்பினார்.

இதுகுறித்து நீடாமங்கலம் போலீசில் தமிழார்வன் புகார் செய்தார். புகார் மனுவில், சசிகலா சகோதரர் திவாகரன் தூண்டுதலின்பேரில் தன்னை 2 பேர் அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றதாக கூறியிருந்தார். அதன்பேரில் திருவாரூர் குற்றப்பிரிவு டிஎஸ்பி குணசேகரன் மற்றும் போலீசார் நேற்றிரவு மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டைக்கு சென்றனர். அங்கு திவாகரனை கைது செய்து விசாரணைக்காக நீடாமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிந்து அவரை திருவாரூர் தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில், கிருஷ்ண மேனன், ராஜேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். 3 பேரும் நீடாமங்கலம் நீதிபதி முருகன் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 5.4.13 வரை காவலில் நீதிபதி வைக்க உத்தரவிட்டார். அதன்படி மூவரும் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment