Wednesday, March 27, 2013

சென்னையில் இடம் பெறும் இந்தியன் ப்ரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணி இல்லை!

Wednesday, March 27, 2013
சென்னை::சென்னையில் இடம் பெறும் இந்தியன் ப்ரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணி வீரர்களை இணைத்துக் கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை இந்தியன் ப்ரிமியர் லீக் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டிகளில் 10 ஆட்டங்கள் சென்னையில் இடம் பெறவுள்ளன.

இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டிகளில் இந்த முறை 8 அணிகளை பிரதிநிதித்துவப்படும் முகமாக 13 இலங்கை அணி வீரர்கள் பங்கு கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது.

இதேவேளை, கிரிக்கட்டில் அரசிலை புகுத்துவது கவலையளிப்பதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கை அணி வீரர்கள் இலங்கையின் சொத்து எனவும் அவர் விபரித்துள்ளார்.

இந்தநிலையில், அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சென்னையில் இலங்கை அணி வீரர்கள் விளையாடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி தமிழக மாணவ அமைப்பு சென்னை காவற்துறை ஆணையாளரிடம் மனுவென்றை கையளித்துள்ளது.

No comments:

Post a Comment