Wednesday, March 27, 2013

ஜெ. மீது வழக்கு தொடர்வேன்- twitterல் சுவாமி ஆவேசம்!

Wednesday, March 27, 2013
சென்னை::இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக ஐபிஎல் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், சக அதிகாரிகள் பங்கேற்க் கூடாது என்று கூறிவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக விரைவில் வழக்கு தொடர உள்ளதாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், சக அதிகாரிகள் பங்கேற்க் கூடாது.

இலங்கை வீரர்கள் பங்கேற்காததை உறுதி செய்தால் மட்டுமே ஐபிஎல் போட்டிகளை தமிழக அரசு அனுமதிக்கும் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா, இதனை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் ஒன்றையும் எழுதினார்.


தமிழக முதல்வரின் இம்முடிவு இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் தமிழக முதல்வரின் முடிவை எதிர்த்து விரைவில் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்..

ஜெயலலிதாவின் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான இந்தக் கோரிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சிறப்பு ஆயுதப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து போட்டிகளை நடத்தி இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் சென்னையை பதற்றப் பகுதியாக அறிவித்து ஜெயலலிதாவை ஏற்கச் செய்ய வேண்டும். இதையும் ஏற்க மறுத்தால் அரசியல் சாசனத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை ஜனாதிபதி நீக்கச் செய்யலாம்.

அத்துடன், மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு 256-ன் கீழ் சில வழிகாட்டு முறைகளை அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்..

No comments:

Post a Comment