Wednesday, March 27, 2013

சென்னைக்கு சென்று வளையாடப் போவதில்லை: இலங்கையின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன்!

Wednesday, March 27, 2013
இலங்கை::சென்னைக்கு சென்று வளையாடப் போவதில்லை என இலங்கையின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியலையும், விளையாட்டையும் கலக்க முயற்சிப்பது மிகவும் வேதனைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.சென்னையில் தாம் விளையாடக் கூடாது என தமிழக அரசாங்கம் கருதினால், அங்கு சென்று விளையாடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தம்மால் எதனையும் செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியள்ளார்.

முத்தையா முரளீதரன் இம்முறை இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் பங்களுர் றோயல் சலன்ஜர்ஸ் அணியில் அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.தாம் விளையாடுவதனை பார்ப்பதற்கு சென்னை விரும்பவில்லையென்றால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது எனவும், அது உலக முடிவாக கருத வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு வீரர் என்ற ரீதியில் அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டியதில்லை எனவும், மைதானத்தில் திறமைகளை வெளிப்படுத்த வேண்டியதே தமது கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.'நான் தமிழன், எனினும் அதற்கு முதல் நான் ஓர் இலங்கையர், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நானும் சென்னையில் சென்று விளையாட மாட்டேன். யுத்த நிறைவின் பின்னர் நாட்டில் பாரியளவு சமாதான நிலைமை நீடித்து வருகின்றது இதனை உறுதிபடக் கூற முடியும். தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அனைவரும் சமமாக நடாத்தப்படுகின்றனர்' என முரளீதரன் இந்திய ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.

No comments:

Post a Comment