Thursday, March 28, 2013
ராமேஸ்வரம்::இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர், இன்று(மார்ச் 28) மன்னார் கோர்ட்டில், ஆஜர்படுத்த உள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து, மார்ச் 13ம் தேதி, மீன்பிடிக்க சென்ற பூண்டிராஜ், சூசை அருளானந்தம், ராஜி, சேவியர் ஆகியோருக்கு சொந்தமான படகில் இருந்த 19 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, வவுனியா சிறையில் அடைத்தனர்.இவர்களை விடுவிக்கக்கோரி, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், தொடர்ந்து 12 நாட்களாக, வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில், மீனவர்கள் 19 பேரும், இன்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவ சங்க நிர்வாகிகள் கூறுகையில்,
19 பேரும் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கிறோம்,'' என்றனர்.

No comments:
Post a Comment