Wednesday, February 6, 2013

பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆசியாவின் சிங்கம் என பெயரிடுவது அவருக்கு வழங்கும் கௌரவமாகும் - ஈரானுக்கான இலங்கை தூதுவர் பைசால் ராஷின்!

Wednesday, February 06, 2013
இலங்கை::பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆசியாவின் சிங்கம் என பெயரிடுவது அவருக்கு வழங்கும் கௌரவமாகும் என ஈரானுக்கான இலங்கை தூதுவர் பைசால் ராஷின் கூறியுள்ளார்.

ஈரானில் உள்ள இலங்கை தூதரகத்தில் நடைபெற்ற இலங்கையின் 65 வது சுதந்திரத் தின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை, சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் எந்த பேதங்களும் இன்றி சுதந்திரத்தினத்தை கொண்டாடுகின்றனர். பலருக்கு இந்த நிலைமை மறந்து போயுள்ளமையானது நாட்டின் துரதிஷ்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இலங்கையில் உள்ளவர்கள் அனைவரும் எவ்வித பயமும் இன்றி அனைத்து இடங்களுக்கும் செல்ல முடிந்துள்ளது. உலகில் மிகவும் ஆபத்தான பயங்கரவாதத்தை தோற்கடித்தன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உலக வரலாற்றில் இடம்பெறபோகும் உலகில் உள்ள சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர். அவரை ஆசியாவின் சிங்கம் என வர்ணிப்பது அவருக்கு கொடுக்கும் மரியாதையாகும் எனவும் இலங்கை தூதுவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment