Wednesday, February 06, 2013
இலங்கை::அமெரிக்காவின் சித்திரவதைத் திட்டங்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அசராங்கம் ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நியூயோர்க்கை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமை அமைப்பு ஒன்று இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவினரால் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக மேற்கொண்ட பல்வேறு சித்திரவதை நடவடிக்கைகளுக்கு இலங்கை உள்ளிட்ட 54 நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரகசிய சிறைச்சாலைகள், பயங்கரவாதிகளை போக்குவரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு சித்திரவதை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சீ.ஐ.ஏ உளவுப் பிரிவினர் இலங்கையின் வான் பரப்பையும், விமானங்களையும் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
2003ம் ஆண்டு சி.ஐ.ஏ உளவுப் பிரிவின் விமானமொன்று இலங்கையில் தரையிறக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.2001 செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா பயங்கரவாத சந்தேக நபர்களை அமெரிக்காவிற்கு வெளியே வைத்து விசாரணை செய்தாகத் தெரிவிக்கப்படுகிறது. சில நேரங்களில் விசாரணைகளுக்காக சித்திரவதை அணுகுமுறைகளும் பயன்படுத்திக்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,

No comments:
Post a Comment