Wednesday, February 06, 2013
ராமநாதபுரம்::ராமநாதபுரத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்களுக்கு தன்னாட்சி தர இயலாது என்று அறிவித்ததற்கும் கண்டனம் தெரிவித்து, நாம் தமிழர் கட்சி யைச் சேர்ந்தவர்கள் ராம நாதபுரம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலை மறித்து கோஷமிட்ட அக்கட்சியைச் சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment