Wednesday, February 6, 2013

அவுஸ்திரேலிய-மானஸ் மற்றும் நௌவுரு தீவுகளில் உள்ள அகதி முகாம்களில் இடம்பெறும், தற்கொலை முயற்சிகள் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் தொடர்பில் விசாரணை நடத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது!

Wednesday, February 06, 2013
அவுஸ்திரேலிய கண்டத்திற்கு உரித்தான மானஸ் மற்றும் நௌவுரு தீவுகளில் உள்ள அகதி முகாம்களில் இடம்பெறும், தற்கொலை முயற்சிகள் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

குடிவரவுத்துறை அமைச்சர் பிரன்டன் ஓ கோனர் இதனை அறிவித்தலை விடுத்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் தமது அமைச்சில் பதவியேற்றுக்கொண்ட அவர், எதிர்வரும் நாட்களில் நௌவுரு தீவு முகாமுக்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்பின்னரே, உரிய தகவல்களை வழங்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் 40 வருடக்காலமாக தாதியாக தொழில்புரியும் மரினே இவார்ஸ் என்பவர் அண்மையில் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் குறித்த முகாம்களின் நிலைமை மோசமானது என்று குறிப்பிட்டிருந்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பதை தாம் கண்டதாக அவர் தெரிவித்தார்.

மூன்று வாரங்கள் தாம் அங்கு தங்கியிருந்த போது 4 தற்கொலை முயற்சி சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததாக அந்த தாதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் சில குழுக்களினால் பாலியல் வன்புணர்வுகளும் மேற்கொள்ளப்படுவதாக தமக்கு மருத்துவ பணியாளர்கள் கூறியதாகவும் தாதி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment