இலங்கை::மனித உரிமை விவகாரங்கள் ஐக்கிய நாடுகள் பிரகடனத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சர்வதேச உறவுகள் மற்றும் வியன்னா பிரகடனத்தின் அடிப்படையில் மனித உரிமை குறித்த விடயங்கள் கையாளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
மனித உரிமைப் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு என்ற விடயங்கள் ஐக்கிய நாடுகள் பிரகடனங்களுக்கு உட்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருக்கு இலங்கை அரசாங்கம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
மனித உரிமை மேம்பாடு மற்றும் பாதுகாப்பு போன்றன தொடர்பிலான தீர்மானங்களின் போது பரஸ்பர கௌரவம், இணக்கப்பாடு, பேச்சுவார்த்தை போன்ற காரணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.எதிர்வரும் காலங்களிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் மிகவும் நெருங்கிய உறவுகளைப் பேணவே இலங்கை விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment