Tuesday, February 26, 2013
இலங்கை::நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த போதியளவு கால அவகாசம் தேவையென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.நிரந்தர சமாதான முனைப்புக்களுக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும், அதற்கு சில காலம் தேவைப்படும் எனவும் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் ஏனைய அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் சிரத்தையுடன் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் அரசாங்கம் காத்திரமான முறையில் அமுல்படுத்தி வருவதாகவும், அதற்கென தேசிய செயற்திட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment