Tuesday, February 26, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் பேரவையில், சனல்-4 தயாரித்த 'போர் தவிர்ப்பு வலயம்' என்ற ஆவணப்படத்தை திரையிடுவதற்கு இலங்கை தனது கடும் எதிர்ப்புத் தெரித்துள்ளது.
இந்த ஆவணப்படத்தை திரையிடுவதற்கு மனிதஉரிமை அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. இந்நிலையிலேயே இந்த ஆவணப்படத்தை திரையிடக்கூடாது என்று ஜெனிவாவுக்கான இலங்கைக்கான தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
போர் தவிர்ப்பு வலயம்' என்ற இந்த ஆவணப்படம் உறுதிப்படுத்தப்படாத- ஆதாரமற்ற, நம்பகமற்ற காட்சிகளைக் கொண்டுள்ளது என்பதுடன் இந்த ஆவணப்படம் திரையிடப்படுமானால், ஐக்கிய நாடுகள் சபையே அதன் சட்டங்களை மீறிவிடுவதாக அமைந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்...
இது குறித்து ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியவங்ச ஐநாவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சனல் 4 வெளியிட்டு இலங்கையை பெரும் சிக்கலில் தள்ளியுள்ள ‘போர் தவிர்ப்பு வலயம்’ (No Fair Zone) எதிர்வரும் மார்ச் 1ம் திகதி ஜெனீவாவில் திரையிடப்படவுள்ளது.
மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இந்த ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் FIFDH என்பன இணைந்து இந்த ஆவணப்படத்தை திரையிடவுள்ளன.
இந்நிலையில் சனல் 4 தொலைக்காட்சியின் ‘போர் தவிர்ப்பு வலயம்’ (No Fair Zone) ஆவணத் திரைப்படத்தினை ஐ.நா மனித உரிமைச்சபையில் திரையிட அனுமதிக்க வேண்டாமென இலங்கை கோரியுள்ளது.
உண்மைக்கு புறம்பான பதிவுகளுடன் இந்த ஆவணத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள, ரவிநாத் ஆரியவங்ச, போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் இனங்களுக்கு இடையிலான ஓற்றுமையினை இது சீர்குலைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
சனல் 4 ஆவணப்படம் திரையிடப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

No comments:
Post a Comment