Tuesday, February 26, 2013

இலங்கையில், மாஜி' புலிகள் தங்கியிருந்த மறுவாழ்வு மையத்தைப் பார்வையிட, சர்வதேச செஞ்சிலுவை கழகக் குழுவினருக்கு, இலங்கை அரசு அனுமதி!

Tuesday, February 26, 2013
ஜெனிவா::இலங்கையில், மாஜி' புலிகள் தங்கியிருந்த மறுவாழ்வு மையத்தைப் பார்வையிட, சர்வதேச செஞ்சிலுவை கழகக் குழுவினருக்கு, அந்நாட்டு அரசு அனுமதியளித்து உள்ளது.

இலங்கையில், 2009ல், புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட சண்டையில், பிரபாகரன் கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏராளமான  புலிகள், அரசு படைகளிடம் சரணடைந்தனர். இந்த சண்டையின் போது, போர் குற்றம் நடந்ததாக, ஐ.நா., குற்றம் சாட்டியிருந்தது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தின. இறுதி கட்ட சண்டையின் போது, சரணடைந்த  புலிகள் பலர் கொல்லப்பட்டதாகவும், மறுவாழ்வு முகாமில் அடைக்கப்பட்ட, "மாஜி' புலிகள் பலர் கொடுமைப்படுத்தப்பட்டவதாகவும் செய்திகள் வெளியாயின. இது தொடர்பாக, சர்வதேச செஞ்சிலுவை கழகத்தைச் சேர்ந்தவர்கள், இலங்கை சென்று நிலைமையை அறிய முற்பட்ட போது, அதற்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. இதற்கிடையே, அடுத்த மாதம், ஜெனிவாவில் உள்ள சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா, தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. இந்த இக்கட்டான நிலைமையை சமாளிக்க, தற்போது, செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளை, இலங்கை அரசு அனுமதித்து உள்ளது.

இது குறித்து, இலங்கை மறுவாழ்வுத் துறை ஆணையர் தர்ஷனா கூறியதாவது: சர்வதேச செஞ்சிலுவை கழகத்தைச் சேர்ந்த குழுவினர், 22ம் தேதி, மறந்தமடு பகுதியில் உள்ள மறுவாழ்வு முகாமை, மூன்று மணி நேரம் சுற்றிப் பார்த்தனர். அங்கு செய்யப்பட்டிருந்த வசதிகளை அவர்கள் மதிப்பீடு செய்தனர். இங்கு, 11 ஆயிரம்  புலிகள் அடைக்கப்பட்டிருந்தனர். பலருக்கு சுயவேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளது. அரசு அளித்த கடனை பயன்படுத்தி, பலர் பல்வேறு தொழில் செய்து வருகின்றனர். தற்போது, சிலர் மட்டுமே இந்த முகாமில் தங்கியுள்ளனர். இவ்வாறு, தர்ஷனா கூறினார்.

No comments:

Post a Comment