Friday, February 01, 2013
கனடாவின் சன் சீ கப்பல் பயணியொருவர் இலங்கைத் தமிழர் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சன் சீ கப்பலில் பயணம் செய்த இலங்கைத் தமிழர் ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த இலங்கைத் தமிழர் விடுத்த புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு வாரங்களில் நாடு கடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2010ம் ஆண்டில் குறித்த இலங்கையர் மேலும் 500 பேருடன் சன் கீ கப்பலின் மூலம் கனடாவில் புகலிடம் கோரியிருந்தார்.
ஆறு மாத காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த தமிழர், பின்னர் விடுதலையாகி கட்டிட நிர்மான நிறுவனமொன்றில் கடமையாற்றியுள்ளார்.
எவ்வாறெனினும், குறித்த இலங்கைத் தமிழருக்கான புகலிடக் கோரிக்கையை அந்நாட்டு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் நிராகரித்துள்ளது.
நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் சித்திரவதைகள் இடம்பெறக் கூடுமென குறித்த இலங்கைத் தமிழர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.
புதிய சட்டத்தின் அடிப்படையில் குறித்த இலங்கைத் தமிழரை கனேடிய அரசாங்கம் இலகுவில் நாடு கடத்தும் என தெரிவிக்க்பபடுகிறது.
ஏனெனில் நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக வழக்குத் தொடர ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டியேற்படும் என குறிப்பிடப்படுகிறது.

No comments:
Post a Comment