Friday, February 01, 2013
இலங்கையி;ன் அரசாங்க அதிகாரி ஒருவரை குற்றம் சுமத்தி தெ ஒஸ்திரேலியன் வெளியிட்ட செய்தியை அவுஸ்திரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது
அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் அகதிகளை அனுப்பும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் பின்புலமாக உள்ளார் என்ற செய்தியை தெ ஒஸ்திரேலியன் செய்திதாள் வெளியிட்டிருந்தது
இந்த செய்தியை அவுஸ்திரேலிய புலனாய்வுப்பிரிவை கோடிட்டு தெ ஒஸ்திரேலியன் வெளியிட்டிருந்தது
குறித்த செய்தியில் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரியின் பெயர் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
இந்தநிலையில் தெ ஒஸ்திரேலியனின் செய்தியை அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மறுத்துள்ளதாக தெ ஹெரால்ட் செய்திதாள் குறிப்பிட்டுள்ளது
இந்த செய்திக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றும் அந்தப்பேச்சாளர் தெரிவித்துள்ளதாக தெ ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment